அனைவரையும் வரவேற்கிறேன். கம்யூனிசமே வெல்லும்!முதலாளித்துவம் கொல்லும்!! உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!

Sunday, March 27, 2011

முற்போக்கு ஜோதிடர் புனிதப்பாண்டியனின் புரட்சி ஆரூடம்


தமிழகத்தில் தலித் முரசு என்று ஒரு பத்திரிகை, அதற்கு புனிதப்பாண்டியன் என்று ஒரு ஆசிரியர், அவர்களுக்கென்று ஒரு அரசியல், வேலைத்திட்டம் அனைத்தும் தேவனால் வழங்கப்பட்டிருக்கின்றன ! குறிப்பாக மார்க்சியத்தை சாதி என்கிற பாதுகாப்பு வளையத்திற்குள் நின்று கொண்டு தாக்கி தலித் மக்கள் மத்தியில் மதிப்பிழக்கச்செய்வதும், மார்க்சியத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளச்செய்வதும் தான் இவர்களுக்கு இடப்பட்ட திருப்பணி. தலித் முரசின் கட்டுரைகளையும், புனிதப்பாண்டியனின் கருத்துக்களையும் இந்த நோக்கிலிருந்து தான் பார்க்க வேண்டும். தலித் முரசின் செயல்பாட்டை தொடர்ச்சியாக கவனித்தால் அவர்கள் கம்யூனிச எதிர்ப்பையும் வெறுப்பையும் விதைத்துக்கொண்டிருப்பதை அறியலாம்.
Download As PDF

Friday, March 11, 2011

நில நடுக்கம்,சுனாமி-சப்பானிய மக்களுக்கு என் அஞ்சலி!

நில நடுக்கமும்,சுனாமிப் பேரலைகளும் சப்பானை பலமாக தாக்கியிருக்கின்றன.பெரும் எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழப்புக்கும்,பேரழிவுக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.
சப்பானிய மக்களுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.
Download As PDF

Saturday, February 12, 2011

மிகப் பெரிய வித்தைக்காரர்கள் மக்களே!சீமான் அல்ல.


முத்துக்குமார் இரண்டாமாண்டு நினைவு விழாவும்,நாம் தமிழர் கட்சியின்
இளைஞர் பாசறையின் துவக்க விழாவும் அண்மையில் நாகப்பட்டினத்தில்
நடைபெற்றது.இளைஞர்கள்  குறிப்பிடும்படியாக கூடி இருந்தனர்.சீமான், நாம்
தமிழர் ஓட்டுச் சீட்டு கட்சியை துவங்கிய போதே அவர் மீது நான் கொண்டிருந்த
முற்போக்கு என்ற அடையாளம் இல்லாமல் போய்விட்டது.நான் அன்றையக்
கூட்டத்திற்கு சென்றிருந்தேன்..சீமான் தன்னுடைய
பேச்சினை துவங்கிய சில நிமிடங்களிலேயே தனது தேர்தல் நிலைப்பாட்டிற்கான காரணத்தை
சொன்னார். ?.
Download As PDF

Tuesday, January 18, 2011

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு இராஜீவ் காந்தி பெயர்-இராஜீவ் அறக்கட்டளைக்கு அரசு மருத்துவமனையை தாரைவார்ப்பதன் முதற்கட்டமே!

இராஜீவ் காந்தியின் குண்டடிப்பட்ட உடல் வைக்கப்பட்டிருந்தது
என்ற ஒரே காரணத்திற்காகவே சென்னை அரசு மருத்துவமனைக்கு
இராஜீவ் காந்தியின் பெயரை வைக்கப் போகிறார்களாம்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய
காங்கிரஸ்  கொறடா பீட்டர் அல்போன்சின் கோரிக்கை ஒன்றினை
ஏற்று,சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு இராஜீவ் காந்தி
பெயர் வைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்திருக்கிறார் கருணாநிதி.
Download As PDF

Saturday, January 8, 2011

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்-தொகுதி-1 தேர்வுகள் சில நினைவுகள்.

 கடந்த சில வருடங்களாக இத்தேர்வினை நான் எழுதி வந்திருக்கிறேன்.

 வட்டிக்கு பணம் வாங்கி சென்னை பெரியார் பயிற்சி மையத்தில் சேரக்   காரணமாக இருந்தவர் முருகேசன.
 
 மதியமும்,இரவும் பெரியார் திடலில்தான் சாப்பாடு.

 இரவு தங்க இடமளித்த நீலாங்கரை மெட்ரோ வாட்டர் நண்பர்கள்.
Download As PDF

Friday, December 17, 2010

பெட்டிக் கடைக்காரரின் துணிவு !




எங்கள் ஊரில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பு தோழர் ஒருவர் பெட்டிக் கடை ஒன்றில் வழக்கமாக புதியசனநாயகம் மற்றும் புதிய கலாச்சாரம் இதழ்களை விற்பனைக்காக போடுவாராம்.

இந்த மாதமும் இதழ்களை விற்பனைக்காக பெட்டிக் கடைக்காரரிடம் கொடுத்திருக்கிறார்.
Download As PDF

Sunday, December 5, 2010

இளையோன் பக்கங்கள்

   நான் கடந்த வாரம் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க வெளியீடு ஒன்றை படித்தேன்.மத்திய அரசு ஊழியர்க்கு இணையான ஊதியம் கோரப்பட்டிருந்தது.மாநில அரசு ஊழியர்க்கு ஏற்படும் இழப்புகள் விவரிக்கபட்டிருந்த்து. Download As PDF